உள்ளூர் செய்திகள்

உலக இயற்கை பாதுகாப்பு தினம்: மரக்கன்று நடவு

காஞ்சிபுரம்: உலக இயற்கை பாதுகாப்பு தினம் முன்னிட்டு குளக்கரை சுற்றிலும் மரக்கன்று நடும் விழா நடந்தது.உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, விதைகள் தன்னார்வ அமைப்பு, விஜயேந்திர கோ சம்ரஷன டிரஸ்ட், ஆதி பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் சார்பில், ஒரகடம் அடுத்த வட்டம்பாக்கம், பெரிய நாயகி உடனுறை அருள்நிறை சிவ கொழுந்தீஸ்வரர் கோவில் வளாகம் மற்றும் கோவில் குளக்கரையை சுற்றிலும் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், வில்வம், வேம்பு, கருங்காலி, நாவல், ஆலம், அரசு, வன்னி, நாகலிங்கம், ருத்ராட்சம், மகிழம், மூங்கில், இலுப்பை, கொய்யா, முந்திரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாட்டு வகை மரகன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்