உள்ளூர் செய்திகள்

தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

மயிலம்: மயிலம் சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி செயலாளர் விஸ்வநாதன் தினமலர் - பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமையாசிரியர் வீரப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்