இன்று இந்தியாவில் செல்போன் சேவை துவங்கப்பட்ட தினம்
1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல்போன் சேவை கொல்கத்தாவில் துவங்கியது. 1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுடன் செல்போன் மூலம் பேசி தொடங்கி வைத்தார். மோதி - டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17 ரூபாய் கட்டணமாய் வசூலிக்கபட்டது. இன்கம்மிங் காலுக்கு 8 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் மாதம் 600 ரூபாய் மாதகட்டணமாய் செலுத்த வேண்டியும் இருந்தது.