உள்ளூர் செய்திகள்

அவிநாசி அரசு கல்லுாரியில் நாக் கமிட்டி ஆய்வு

அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அளிக்க, பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.கல்லுாரியில், நேற்று நாக் எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அளிப்பதற்காக அதன் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். கர்நாடக மாநிலம், ஸ்ரீநிவாசா பல்கலையை சேர்ந்த துணைவேந்தர் ஸ்ரீ ராமண அய்த்தல், டில்லி பெனட் பல்கலை பேராசிரியர் மனிஷா பல்லா, மகாராஷ்டிரா மாநிலம், மகாவீர் மகா வித்யாலயா பல்கலை முதல்வர் முனைவர் ராஜேந்திர லோகன்டே ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வில் கல்லுாரி கட்டமைப்பு, ஆய்வக வசதி, கணினி வசதி, நுாலகம், விளையாட்டு அரங்கம், கலையரங்கம், பேராசிரியர்களின் படைப்பாற்றல் மற்றும் மாணவர்களின் கலைத்திறன் ஆகியவற்றை தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது. இன்றும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று, கல்லுாரி முதல்வர் நளதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்