உள்ளூர் செய்திகள்

பின்னலாடை துறை: இயற்கை சார் ஆடை தயாரிப்பு

திருப்பூர், முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லுாரியின், அடல் இன்குபேஷன் மையம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, புதுவகையான ஆடை ரகங்கள், ஜவுளி தயாரிப்புக்கு ஊக்கப்படுத்துகிறது.மும்பையை சேர்ந்த செடெக்ஸ் எனப்படும் உரம் தயாரிப்பு நிறுவன தொழில்நுட்ப பிரிவு தலைவர் அஜய் ரங்கா தலைமையிலான குழுவினர், திருப்பூர் அடல் இன்குபேஷன் மையத்தை பார்வையிட்டனர். புதுமையான ஆடை தயாரிப்புக்காக நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள், வாழை நாரில் தயாரித்த துணி, இயற்கை சாயமேற்றப்பட்ட ஆடை ரகங்கள், ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.இயற்கைக்கு உகந்தரசாயன பயன்பாடுஇன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி பேசியதாவது:உலகளாவிய சந்தையில், செயற்கை இழை ஆடைகளின் பங்களிப்பு தற்போது, 69 சதவீத அளவில் உள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள், செயற்கை இழை ஆடை தேவை 75 சதவீதமாக உயர்ந்துவிடும் என, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பருத்தி ஆடை ரகங்கள், இயற்கையில் மக்கும் தன்மை கொண்டவை. ஆனாலும், தீ தடுப்பு, கறை படியாமை உள்ளிட்ட பல்வேறு தன்மைகளுக்காக சேர்க்கப்படும் ரசாயனங்களால், பருத்தி ஆடைகள், பயன்பாட்டுக்குப்பிறகு நிலம் உட்பட சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துபவையாக மாறிவிடுகின்றன. ஆடை தயாரிப்பின் அனைத்து படிநிலைகளிலும், இயற்கைக்கு உகந்த ரசாயனங்களை பயன்படுத்துவது அவசியமாகிறது; இதற்கு செடெக்ஸ் நிறுவனம் கைகொடுக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.ரெடிசெடெக்ஸ் நிறுவன தொழில்நுட்ப பிரிவு தலைவர் அஜய் ரங்கா பேசியதாவது:எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த சுற்றுச்சூழலை வழங்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமை நாடுமுழுவதும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகரவேண்டியது அவசியம். இதில், செடெக்ஸ் நிறுவனம், முக்கிய பங்காற்றிவருகிறது. ஆர்கானிக் பருத்தி உற்பத்தி முதல், ஆடை தயாரிப்பில் மதிப்பு கூட்டுதலுக்கு தேவையான, இயற்கைக்கு பாதிப்பில்லாத ரசாயனங்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறோம். அடல் இன்குபேஷன் மையத்துடன் இணைந்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின், இயற்கை சார் ஆடை உற்பத்திக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம். தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்களை வலுப்படுத்தும் படிப்புகள் அவசியமாகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்