உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு அமைச்சர் உதவி

ரெட்டியார்சத்திரம்: நீட் தேர்வில் வென்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நிதி உதவி வழங்கினார்ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் அருகே சட்டையப்பனுாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேல்முருகன் மகள் ஷர்மிளா. முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்த இவர் நீட் தேர்வில் வென்றார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமியை பெற்றோருடன் சந்தித்த மாணவி வாழ்த்து பெற்றார். அவருக்கு அமைச்சர் நிதியுதவி வழங்கினார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்