உள்ளூர் செய்திகள்

நானோ தொழில்நுட்பத்தில் தண்ணீர் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்

மதுரை பாத்திமா கல்லூரியில் இயற்பியல் துறையின் கருத்தரங்கு நடந்தது. பேராசிரியை லலிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாத்திமா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் துணை சேர்மன் அய்யம்பெருமாள் பேசியதாவது:நம் நாட்டில் 100 கோடி மக்களுக்கு மேல் இருந்தாலும், அறிவியல் துறையில் சரியான விழிப்புணர்வு இல்லை. மாணவர்கள் புத்தக அறிவு என்னும் குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அறிவியலைப் பயன்படுத்த வேண்டும். எதையும் ஏன்,எதற்கு,எப்படி என்னும் கேள்வி கேற்கும் திறனுடன் ஆழ்ந்து படிக்க வேண்டும்.நானோ தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தி தண்ணீர், சூரியஒளியிலிருந்து மின்சாரம் பெற முடியும். மாணவர்கள் இத்தகைய கருத்தரங்கில் கலந்து கொள்வதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்படும் என்றார். செயலாளர் எஸ்தர்மேரி,பத்திரிக்கையாளர் மோகன்சுந்தரராஜன், பேராசிரியை பிரசாந்திதேவி, சரகோபாலன் கலந்து கொண்டு பேசினர். விஜயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்