உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளி ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஓய்வு பெறுவதன் மூலம் காலியாகும் காலி பணியிடங்கள் பற்றி முன் கூட்டியே பட்டியல் தயார் செய்யப்படுவதில்லை. இதனால் சீனியாரிட்டி தெரியாமல் ஆசிரியர்கள் அலைபாய வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க முன்கூட்டியே டிச.31ம் தேதிக்குள் பட்டியலிட்டு, ஜன.1 முதல் பணிமூப்பு பட்டியலில் சேர்த்து, சீனியாரிட்டி வெளியிடப்பட வேண்டும். ஆட்சேபணைகள் வந்தால், பணி பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி செய்து, சீனியாரிட்டி பேனல் வெளியிடப்பட வேண்டும். காலியாக உள்ள இடங்களில் கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளம், ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் கிடைக்காமல் தாமதம் ஏற்படுகிறது. இதையும் மாற்ற வேண்டும். அவர்களுக்குஉரிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணம், ஊதிய உயர்வு போன்றவையும் உடனுக்குடன் கிடைத்திட வேண்டும். பின் தங்கிய மாணவர்கள் படிக்கும், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி கம்பர் மேனிலைப் பள்ளியில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியரும் ஒரு கணித பட்டதாரி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். நான்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாகாளிபட்டி மாநகராட்சி பாரதிதாசன் மேனிலைப்பள்ளி, தரம் உயர்த்தப்பட்டு இரு ஆண்டுகளாகி விட்டன. ஆனால் ஆய்வகங்கள் இல்லை. மோசமான கட்டடங்களில் செயல்படும் வில்லாபுரம், ஜெய் ஹிந்த்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். மாநிலம் முழுவதும், அரசு துறைகளில் தலைமை எழுத்தர் பதவி, கண்காணிப்பாளர் பதவியாக மாற்றப்பட்டு பத்து ஆண்டுகளாகி விட்டன. மாநகராட்சி கல்விப் பிரிவில் மட்டும் தலைமை எழுத்தர் பதவியே இன்னமும் நீடிக்கிறது. இதை மாற்றி, தொடக்கக் கல்விக்கும், மேனிலைக் கல்விக்கும் தனித்தனியாக கண்காணிப்பாளர் பதவி ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி கல்விப்பிரிவில் காலியாக உள்ள எழுத்தர்கள் இடத்தை நிரப்ப வேண்டும். அரசு கல்வித் துறையை பின்பற்றி, மாநகராட்சி மேனிலைப் பள்ளிகளில் அரசு நிதி கிடைக்கும் பாடப்பிரிவுகளை மட்டுமே நடத்த உத்தரவை பெற வேண்டும். உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 1998 முதலும், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 2000ம் ஆண்டு முதலும் குடும்ப நலநிதி வழங்கப்படாமல் இருக்கிறது. இந்நிதியை அரசிடம் இருந்து பெற்று வழங்க வேண்டும். மாநகராட்சி அனைத்து ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் நமச்சிவாயம், சென்ற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளை விட, மாநகராட்சி பள்ளி மாணவர்கள், அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் இப்போது உள்ள குறைகளையும் சரி செய்தால் மாணவர்கள் மேலும் சாதனைகள் படைப்பர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்