அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் தினமலர் சான்றிதழ்
சென்னை: விஜயதசமி அன்று அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு, பிரபலங்கள் வாயிலாக, அ, ஆ... எழுத கற்றுக் கொடுப்பதுடன், புகைப்படத்துடன் கூடிய தினமலர் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளுக்கு, விஜயதசமி அன்று, அ - ஆ கற்பிக்க ஆசையா; அதுவும், பிரபலங்கள், உங்கள் பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, அ - ஆ எழுதி பழக்க வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா? உங்களுக்குதான் அந்த வாய்ப்பு காத்திருக்கிறது. வாருங்கள், 91505 74441 என்ற வாட்ஸாப் எண்ணில் முன்பதிவு செய்து காத்திருங்கள்.எங்கே... எப்படி?கல்விக்கும், கலைகளுக்கும் கடவுளாம் கலைவாணியான சரஸ்வதியை வணங்கி, நம் குழந்தைகளுக்கு, கல்வியையும், கலைகளையும் கற்பிக்க விஜயதசமி நாளை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, 24ம் தேதி, தினமலர் நாளிதழும், வேலம்மாள் நியூஜென் கிட்சும் இணைந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்த உள்ளன.சென்னை சூரப்பேட்டில் உள்ள வேலம்மாள் வித்யாரஷ்ரம் பள்ளி வளாகம்; மேடவாக்கத்தில் உள்ள வேலம்மாள் நியூஜென் பள்ளி வளாகம்; வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில்; தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வித்யாரம்பம்என்ற, அன்னா - ஆவன்னா எழுதும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதாவது, 24ம் தேதி காலை, 7:30 முதல் 11:00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கும்.முன்பதிவுஇதில் பங்கேற்க, உங்களின், 2.5 முதல் 3.5 வயது வரை உள்ள குழந்தைகளை அழைத்து வரலாம். அவர்களின் பிஞ்சு விரல் பிடித்து, பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், அ - ஆ எழுத பழக்குவர். அத்துடன், உங்கள் சுட்டிக் குழந்தை, பிரபலமானவருடன், அ எழுதும் புகைப்படத்துடன், தினமலர் சார்பில் சான்றிதழும் கிடைக்கும்.அதுமட்டுமல்ல, அனைத்து குழந்தைகளுக்கும், 1,000 ரூபாய் மதிப்புள்ள பெரிய வேக்ஸ் கிரையான், பென்சில், அழிரப்பர், ஸ்லேட் உள்ளிட்டவற்றுடன், லேர்னிங் கிட் பார் கிட்ஸ் என்ற, பரிசு தொகுப்பு பையும் தரப்படும். பெற்றோர்களே... அதற்கு முன், இப்போதே, 91505 74441 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு, Hi என, குறுஞ்செய்தி அனுப்புங்கள். உங்களுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்படும்.அதை பூர்த்தி செய்து, நீங்கள் விரும்பும் இடத்தையும் தேர்வு செய்து அனுப்புங்கள். உங்கள் குழந்தைக்கு முன்பதிவு கிடைத்து விடும். மேலும் தகவல்களை அறிய, 81483 01771, 81299 71772 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.