நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் மகேஷ்
தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும், அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், சிறப்பு பயிற்சி நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதிச் சுமையை குறைக்க, பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ளது.அரசு தங்களது கருத்துகளை இது போன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.