உள்ளூர் செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு கருத்தரங்கு

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மத்திய அரசின் நிதியை பெற்று, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்த, ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய தரமேம்பாட்டு அமைப்பின் சார்பில், பேராசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம், முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. அரசு கல்லுாரி நுாலகர் ஹரிஹரன் வரவேற்றார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் வாசுதேவன், வால்பாறை அரசு கலைக்கல்லுாரி கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்துறை தலைவர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது, கல்லுாரியின் வளர்ச்சி, மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கல்லுாரியின் தேவைகள் குறித்து பட்டியலிட வேண்டும். மத்திய அரசின் நிதியை பெற்று, கல்லுாரியில் உட்கட்டமைப்பு வசதி மேற்கொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். கல்லுாரியை மேம்படுத்தி, கற்றலுக்கான சூழலை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் நிதியை முழுமையாக கையாள வேண்டும் என, குறிப்பிட்டனர்.கருத்தரங்கில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்