உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் பிஎச்.டி., வாய்மொழி தேர்வு முறை நீக்கம்

இக்கூட்டம் துணைவேந்தர் குமார் தலைமையில் நடந்தது. பதிவாளர்(பொறுப்பு) ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நாகரத்தினம், தவமணி கிறிஸ்டோபர், புஷ்பராஜ், சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உறுப்பினர்கள் பேசியதாவது:சதாசிவம்: பல்கலை துறைகள், புலங்களில் உதவி, இணை, பேராசிரியர்களிடையே பணிமூப்பு நிர்ணய பிரச்னை உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணைவேந்தர்: இப்பிரச்னை நியமனக் கமிட்டியில் வைத்து முடிவு எடுக்கப்படும்.பிரபாகரன்: பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லுாரி முதல்வர்கள் நியமனத்தில் அவர்களுக்கான கல்வித் தகுதி சான்று வழங்குவதில் பல்கலை இழுத்தடிக்கிறது. உரிய தகுதி இல்லை என்றாலும்இப்பிரச்னையில் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்று நீடிக்கும் நிலை உள்ளது.துணைவேந்தர்: இப்பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது.சுல்தான் இப்ராஹிம்: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் நடந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளன. &'தினமலர்&' நாளிதழிலும் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.பொன்ராம்: விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு 2022 முதல் ரூ.58 லட்சம்வரை மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. தேர்வு முடிவும் உரிய நேரத்தில் வெளியாவதில்லை. சான்றிதழ்களும் பெற முடிவதில்லை.துணைவேந்தர்: மதிப்பெண்கள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.வேளாங்கண்ணி: பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பதவி வழங்கும்போது தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இதற்கு பல்கலை விதி உள்ளது.துணைவேந்தர்: உரிய பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.சதாசிவம், தீனதயாளன்: பல்கலையில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும். இதற்கு கமிட்டி அமைக்க வேண்டும்நாகரத்தினம், சிண்டிகேட் உறுப்பினர்: நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக அரசு போதிய நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.பொன்ராம்: பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் பல்கலையால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தான் பின்பற்ற வேண்டும். 2 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கவில்லை. தகுதியுள்ள பேராசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.தீனதயாளன்: பிஎச்.டி., படிப்புக்கான வாய்மொழி (வைவா) தேர்வு ஆன்லைனிலும், நேரடியாகவும் நடத்தப்படுகிறது. ஆன்லைன் முறையை நீக்க வேண்டும். வழிகாட்டியின் விருப்பப்படி, தமிழ்நாடு அல்லது பிற மாநிலம் என ஒரு புறத்தேர்வாளர் மட்டும் பங்கேற்கலாம் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார்.இதன்படி கூட்டத்தில் ஆன்லைன் முறை நீக்கம் செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்