அரசு பல் மருத்துவ கல்லுாரி கட்டடம் திறப்பு
சென்னை: புதுக்கோட்டையில், 67.83 கோடி ரூபாய் செலவில், தமிழகத்தின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியாக திறந்து வைத்தார்.இக்கல்லுாரியில் நடப்பாண்டில் இருந்து ஆண்டுதோறும், 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள், 5.10 கோடி ரூபாய் மதிப்பில், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார பகுதி மாவட்டங்களில், பொது சுகாதாரத் துறை சார்பில், 8.89 கோடி ரூபாயில், 27 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, சுப்பிரமணியன், மெய்யநாதன் பங்கேற்றனர்.