பட்டதாரி ஆசிரியர் பணி தேர்விற்கு இலவச பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று(நவ.18) முதல் பட்டதாரி ஆசிரியர்போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில்வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பி.எட்.,தேர்ச்சி, ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவ.30க்குள் ஆன்-லைன் வழி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு 2024 ஜன.1 ல் நடக்கிறது.கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை ஆசியர் பணி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்இன்று முதல் துவங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் மற்றும் 04567-230160 அல்லது 78670 80168 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.