உள்ளூர் செய்திகள்

பள்ளியை சூழ்ந்த மலைத்தேனீ ஆசிரியர்களால் தப்பிய மாணவர்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பள்ளியை மலைத்தேனீக்கள் சூழ்ந்த நிலையில் மாணவர்களை ஆசிரியர்கள் சமயோசிதமாக வெளியேற்றி காப்பாற்றினர்.இவ்வொன்றியத்தில் எம்.வையாபுரிபட்டி தொடக்கப்பள்ளி முன் உள்ள மரத்தில் நேற்று மலைத்தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பறவை மோதியதில் தேன்கூடு கலைந்து தேனீக்கள் அப்பகுதியில் சென்றவர்களை கொட்டின.பள்ளியை சுற்றி தேனீக்கள் பறந்ததால் தலைமை ஆசிரியர் ரோகிணி, ஆசிரியர் அமுதா, சமையலர் ஜெயமணி ஆகியோர் கதவை மூடி மாணவர்களை பாதுகாத்தனர். பிறகு துணி, சாக்குகளை கொண்டு மாணவர்களை மறைத்தவாறு பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளி சமையலர் ஜெயமணி, அவ்வழியாகச் சென்ற பாலு, ஞானம், ரஞ்சிதம், தேன்மொழி ஆகியோரையும் தேனீக்கள் கொட்டின. அனைவரும் மு.சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.தேன்மொழி மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கவச உடை அணிந்து தேனீக்களை தீ வைத்து விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்