உள்ளூர் செய்திகள்

அரையாண்டு தேர்வு: மாநில அளவில் ஒரே வினாத்தாள்

பள்ளி கல்வித்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரையாண்டு தேர்வுக்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இரு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச., 11 முதல், 21 வரையிலும்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச., 7 முதல், 22 வரையிலும், அரையாண்டு தேர்வு நடக்கும்.இந்த அட்டவணையை பின்பற்றி தேர்வை நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டியே உரிய பாதுகாப்புடன், வினாத்தாள்கள் ஆன்லைன் வழியில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பதிவிறக்கம் செய்து, தேர்வு நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்