கம்ப ராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்க பிரதமர் உத்தரவு
சென்னை: கம்பராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கும்படி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தெரிவித்தார்.டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய &'கம்பனில் மர்மக்கோடுகள்&' என்ற நுாலை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் வெளியிட, ஆன்மிக பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் பெற்றுக்கொண்டார்.நுாலை வெளியிட்டு தெ.ஞானசுந்தரம் பேசியதாவது:நுாலாசிரியர் பிரியா ராமச்சந்திரன் சிறந்த டாக்டர், பேச்சாளர், ஆய்வாளர், பாடகர், நுாலாசிரியர் எனும் பன்முகம் கொண்டவர். இவர், பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வந்தபோது, கம்பராமாயணத்தின் சில பாடல்களை தேர்வு செய்து குருசரணை பாட வைத்தார். எங்களை விளக்கம் சொல்ல வைத்தார். அதைக்கேட்டு பிரமித்த பிரதமர், டில்லி சென்றதும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தொடர்புகொண்டு, கம்பராமாயணத்தின் ஹிந்தி பதிப்பை கேட்டுள்ளார். அது இல்லை என்றதும் உடனடியாக ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், மொழிபெயர்க்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதற்கு காரணம் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, இலங்கை ஜெயராஜ் தலைமையில், டாக்டர்கள் பிரியாராமச்சந்திரன் மற்றும் முகமது ரீலா பங்கேற்ற ராவணன் வீழ்ச்சிக்கு காரணமானவர் பட்டியலில் சூர்ப்பனகையை முதலிடத்தில் இருத்துவது முறை அல்ல என்ற தலைப்பில், வழக்காடு மன்றம் நடந்தது.