உள்ளூர் செய்திகள்

அழைப்பு மேற்கொள்வோரின் பெயரை காட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு

புதுடில்லி: மொபைல் போனில் அழைக்கும் நபரின் பெயரை, அவர் யாருக்கு அழைப்பு விடுக்கிறாரோ, அந்த நபருக்கு மொபைல் எண்ணுடன் காட்சிப்படுத்த வேண்டும் என டிராய் எனப்படும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, டிராய் பிறப்பித்த உத்தரவு:மொபைல் போனில் அழைக்கும் நபரின் பெயரை, அவர் யாருக்கு அழைப்பு விடுக்கிறாரோ, அந்த நபருக்கு மொபைல் எண்ணுடன் காட்சிப்படுத்த வேண்டும். இது, சி.என்.ஏ.பி., எனப்படும் அழைப்பு பெயர் விளக்கக் காட்சி என அழைக்கப்படுகிறது.ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள், உரிமம் பெற்ற சேவை பகுதியில், இந்த சேவையை சோதனை அடிப்படையில் முதலில் செயல்படுத்த வேண்டும். மொபைல் எண்ணை வாங்கும்போது, பயனர் எந்த பெயரை அளித்தாரோ அந்தப் பெயரை காட்சிப்படுத்த வேண்டும்.ஒருவேளை அவர் பெயரை மாற்றி இருந்தால், அரசு ஆவணங்களை சரிபார்த்து, அதில் உள்ள பெயரை தொலை தொடர்பு நிறுவனங்கள் காட்சிப்படுத்த வேண்டும்.வணிக நிறுவனங்களை பொறுத்தவரை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் அல்லது ஜி.எஸ்.டி., கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட பெயரை காட்சிப்படுத்த வேண்டும். இந்த சேவை, இந்தியாவில் உள்ள அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சேவையை அமல்படுத்துவதன் வாயிலாக, அழைப்பு நேரம் தாமதமாகும் என்று, தொலை தொடர்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்