உள்ளூர் செய்திகள்

கவுதம் புத்தா பல்கலையில் புதிய படிப்புகள் அறிமுகம்

நொய்டா: புதுடில்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள கவுதம் புத்தா பல்கலையில், ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.கவுதம் புத்தா பல்கலை அறிக்கை:கவுதம் புத்தா பல்கலையில் ஏற்கனவே உள்ள 139 படிப்புகளுடன், 16 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், பி.டெக்., ரோபோடிக்ஸ் மற்றும் பி.டெக்., செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கும் மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது.மொத்தம் உள்ள 4,202 இடங்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் பி.டெக்., - எம்.பி.ஏ., மற்றும் எல்.எல்.எம்., போன்ற படிப்புகளுக்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மே 12ல் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்