உள்ளூர் செய்திகள்

மருத்துவத்துறை கனவு நனவாகும் சேரன் கல்விக்குழுமம் நம்பிக்கை

திருப்பூர்: மருத்துவ துறை சார்ந்த படிப்பு கனவு நனவாகும் என சேரன் கல்வி குழுமம் தெரிவித்துள்ளது.மருத்துவ படிப்பு என்பது, பலருக்கும் ஒரு கனவு என்ற நிலையில், 12ம் வகுப்பு முடித்த பின், நீட் தேர்வுக்கு பலரும் தயாராகின்றனர். இருப்பினும், மருத்துவ படிப்பு கைக்கூடாத பலருக்கு, அத்துறை சார்ந்த, மிகத்தகுதியான பாடப்பிரிவுகள் உள்ளன. இதை சேரன் கல்விக்குழுமத்தினர் வழங்குகின்றனர்.அக்கல்வி குழுமத்தின் உதவி பேராசிரியர் வருண்குமார் கூறியதாவது:எங்கள் கல்லுாரியில், ஆறு ஆண்டு கால பார்ம்.டி படிப்புள்ளது. இதை முடிப்பவர்கள், தங்கள் பெயருக்கு பின் டாக்டர் என, போட்டுக் கொள்ளலாம். தற்போது மருத்துவத்துறையில் அவசிய தேவையாக உள்ள பிசியோதெரபி, நர்சிங் உள்ளிட்ட பாடங்களும் எங்கள் கல்லுாரியில் உள்ளன. மருத்துவத்துறையில் இணைந்து பணிபுரிய விரும்புவோருக்கான வாய்ப்பு, எங்கள் கல்லுாரி வாரியாக சாத்தியமாகும். இதுதவிர, பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. நன்கொடை வசூலிக்கப்படுவதில்லை. டிஜிட்டல் முறை கல்வி, மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஸ்காலர்ஷிப், விளையாட்டு இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, ஸ்டார்ட் அப் வாய்ப்பு, போக்குவரத்து, ஹாஸ்டல் வசதி என, பல வசதிகள் உள்ளன. பல்வேறு மருத்துவமனைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், வேலை வாய்ப்பு எளிதாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்