உள்ளூர் செய்திகள்

அரசு வினாத்தாள் குளறுபடி: மாணவர்கள் தவிப்பு

ராமநாதபுரம்: தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்களுக்கு வினாத்தாள் குளறுபடியாக வழங்கியதால் 2 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர்.தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாம் பருவத்தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் எண்ணும் எழுத்தும் தேர்வில் மாணவர்கள் கற்கும் திறனுக்கு ஏற்ப சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு அரும்பு, சராசரி மாணவர்களுக்கு மொட்டு, சிறப்பான மாணவர்களுக்கு மலர், என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கடந்த இரு பருவங்களில் தனித்தனி வினாத்தாள்கள் வழக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.மூன்றாம் பருவத்தேர்வில் அரும்பு, மொட்டு, மலர், என தனித்தனியாக வினாத்தாள் வழங்கப்படுவதற்கு பதில் ஒரே வினாத்தாள் மட்டுமே வழங்கப்பட்டது. இதன் காரணமாக மெல்ல கற்கும் மாணவர்கள் இந்த வினாக்களுக்கு பதில் எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்