உள்ளூர் செய்திகள்

ஆங்கில மொழிபெயர்ப்பின் மகா பெரியவா நுால் வெளியீடு

மயிலாப்பூர்: ஆன்மிக எழுத்தாளரும்,சொற்பொழிவாளருமானசுவாமிநாதன், மகா பெரியவா என்ற தலைப்பில் 13 நுால்களை தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார்.இப்புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் தொகுதி நுால் வெளியீட்டு விழா, மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, பி.எஸ்.உயர்நிலை பள்ளியில்நடந்தது. தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆர்.ஏ.ஆர்.பைன் கேர் நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கின.இதில் பங்கேற்று தினமலர் நாளிதழின் இணை இயக்குனரும், தாமரை பிரதர்ஸ் இயக்குனருமான ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:மகா பெரியவா நுால்களை எழுதிய சுவாமிநாதன், தினமலர் ஆன்மிக மலரில் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் எழுதும் நுால்கள் அனைத்தையும் நாங்களே வெளியிட வேண்டும். இது யாவும், மகா பெரியவா ஆசியால் தான் நடக்கிறது.மகா பெரியவா, சம்பிராதயங்களை பின்பற்றும்படி அடிக்கடி கூறுவார். இதை தவிர, அவரை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும், சுவாமிநாதன் எழுதிய நுாலில் உள்ளன.மகா பெரியவா விரதம்இருக்கும்போது, பக்தர்களிடம் கை ஜாடையில்தான் பேசுவார். ஒரு நாள், மேற்கொண்டிருந்த விரதத்தை திடீரென கலைத்தார். ஒரு நபரை குறிப்பிட்டு, அவரை பார்க்க வேண்டும். என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்.வி.ஐ.பி.,க்கள் வந்தாலும் இவர் விரதத்தை கலைக்கமாட்டார். இவர் யார்? என்ற கேள்வி பக்தர்களிடத்தில் எழுந்தது. பின் அந்த நபரை, மகா பெரியவா சந்தித்தார்.பின் மகா பெரியவா கூறும்போது, அந்த நபர் சுதந்திர போராட்ட தியாகி. போலீசாரின் தாக்குதலில் அவர் இரு கண்களை இழந்தவர். வெகு துாரத்தில் இருந்து என்னை பார்க்க வந்துள்ளார். அவரின் சந்தோஷத்துக்காக விரதம் கலைத்தேன் என்றார்.இதில் இருந்து, மகா பெரியவா நமக்கு உணர்த்துவது, நாம் அனைவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதுதான்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்