உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப, விளையாட்டு பயிற்சி, தங்கும் இடவசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு, மாநில அளவிலான தேர்வு, தடகளம் ஆண், பெண், குத்துச்சண்டை ஆண், பெண், மேசைப்பந்து ஆண், பெண், டேக்வாண்டோ ஆண், பளுதுாக்குதல், ஆண், வரும், மே, 7ல் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில், காலை, 7:00 மணிக்கும். விளையாட்டு விடுதி, மாவட்ட அளவிலான தேர்வு, தடகளம் ஆண், பெண், கூடைப்பந்து ஆண், பெண், கால்பந்து ஆண், பெண், கைப்பந்து ஆண், பெண், ஹாக்கி ஆண், பெண், கபடி ஆண், பெண், கையுந்துபந்து ஆண், பெண், கிரிக்கெட் மற்றும் நீச்சல் போட்டி ஆண்கள் மட்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாமக்கல், மாவட்ட விளையாட்டு அரங்கம், வரும், மே, 10ல், ஆண்கள், 11ல், பெண்கள்.மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விபரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபடிவம், நேற்று முன்தினம் முதல், www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை, 9514000777 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்