பிரிட்டனின் உயரிய விருதுக்கு இந்திய டாக்டர் தேர்வு
லண்டன்: பிரபல மூளை நரம்பியல் நிபுணர் பிரிட்டனின் உயரிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.இந்திய மருத்துவரான பிரபல மூளை நரம்பியலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் டேவிட் கிருஷ்ண மேனன். இவர் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் மயக்கவியல்துறை பேராசிரியராக உள்ளார்.பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு அந்நாட்டு உயரிய விருதான சி.பி.ஐ., எனப்படும் கமாண்டர் ஆப் தி ஆடர் ஆப் பிரிட்டிஷ் எம்பரர் என்ற விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு டேவிட் கிருஷ்ணமேனன் தேர்வு பெற்றார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தன் பிறந்த நாளன்று இவ்விருதை வழங்கி கவுரவிக்கிறார்.