வயநாடு நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் விஞ்ஞானிகளுக்கு தடை
வயநாடு: வயநாடில் நிலச்சரிவு பாதித்த மெப்பாடி பஞ்சாயத்துக்கு மீட்புப் பணியாளர்களை தவிர விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்ய வரக்கூடாது என, மாநில பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலர் டின்கு பிஸ்வால் கூறியுள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், பேரிடர் பாதித்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால், கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.விஞ்ஞானிகள் ஊடகங்களுக்கு வரம்பின்றி பேட்டி தரக்கூடாது. நிலச்சரிவு குறித்து பல்வேறு நிபுணர்களின் கருத்துக்கள், அதற்கு எதிர் கருத்துக்கள் என்று பரவி வருகின்றன. பேரிடரின் போது இது போன்று நடந்துகொள்ளக் கூடாது. அது மக்களை திசை திருப்பும். ஆய்வுகள் தேவைப்பட்டால் அவற்றை பின்னர் செய்துகொள்ளலாம், என்றார்.