உள்ளூர் செய்திகள்

திறமையை வளர்த்துக் கொள்ளுங்க! மாணவியருக்கு கமிஷனர் அட்வைஸ்

திருப்பூர்: ஸ்ரீபுரம் அறக்கட்டளை, திருப்பூர் சிட்டி போலீஸ் சார்பில், கண்காணிப்பு கேமரா திட்ட துவக்க விழா, போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவமேரி வரவேற்றார். பள்ளி வளாகத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த,ஏழு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எல்.இ.டி., திரை ஆகிய வற்றை, போலீஸ் கமிஷனர் லட்சுமி, மெஜஸ்டிக் கந்தசாமி ஆகியோர் பள்ளிக்கு அர்ப்பணித்தனர்.தொடர்ந்து கமிஷனர் லட்சுமி பேசியதாவது:மாணவியர் பள்ளிப்படிப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த படிப்பு தான் உங்களை அடுத்த முன்னேற்றத்திற்கு நகர்த்தி செல்லும். பெற்றோர், ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள், உங்களின் நன்மைக்கானது என்பதை உணர வேண்டும்.மாணவியர் தங்களின் தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்து துறையை தேர்ந்தெடுத்தாலும்,அதன் வாயிலாக மக்களுக்கு எதுமாதிரியான நன்மை செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.பள்ளிப்படிப்பில் பல்வேறு சோதனைகள் வரும்; அதை தாண்டி சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் நமக்கு எது தேவை, எது நம்மை உயர்த்தும் என்பதை பகுத்தாய்வு செய்து பார்க்க வேண்டும்.நாம் வாழும் காலம் எவ்வளவு தொலைவு என்பது தெரியாது; இருக்கும் வரை பிறரிடம் அன்பு காட்ட வேண்டும். அப்துல் கலாம் சொன்னது போல், உங்களுக்குள் ஒரு கனவு இருக்க வேண்டும்; அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை, மாணவியர் ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீபுரம் அறக்கட்டளை செயலாளர் காண்டீபன், பொருளாளர் கந்தசாமி, ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்