உள்ளூர் செய்திகள்

தேதியை சொன்னால் கிழமை கூறும் பள்ளி மாணவர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனிச்செல்வம், குரு லட்சுமி தம்பதியின் மகன் சற்குருநாதன் 7ம் வகுப்பு படிக்கிறார்.இவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஆங்கில தேதியை கூறினால், அதற்குரிய கிழமையையும், தமிழ் மாத தேதியையும் கூறுகிறார்.2050 ஜனவரி தேதிகள் அட்டவணையை உருவாக்க சொன்னால், ஒரு சில நிமிடங்களில் அந்த கிழமை துவங்கும் நாளில் இருந்து தேதியை எழுத துவங்கி அட்டவணையை உருவாக்கி அதில் உள்ள பொங்கல் பண்டிகை, குடியரசு தின நாட்கள், கிழமைகளை சரியாக குறிப்பிடுகிறார்.மாணவன் சற்குரு நாதனின் அறிவு கூர்மை பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி, அவனிடம் பேசுபவர்களை கூட வியக்க வைக்கிறது.இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், எங்களிடம் கடந்த மாத தேதி, கிழமையை கேட்டால், உடனே பதில் சொல்ல யோசிக்க வேண்டியுள்ளது.ஆனால் பல ஆண்டு களுக்கு முன்னும், எதிர்காலத்திலும் உள்ள தேதிகளை கூறினால், மாணவன் சற்குருநாதன் அதற்குரிய கிழமையை சரியாக சொல்கிறான். அமாவாசை, பவுர்ணமி, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களின் தேதிகளையும் கிழமை யையும் சரியாக கூறுகிறான்.இது வியக்க வைக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்