உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் காமராஜர் சிலை திறப்பு

மோகனுார் : மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பஞ்., தலைவராக கவிதா உள்ளார். இவர், சொந்த செலவில், பள்ளி வளாகத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை அமைத்தார். அதன் திறப்பு விழா நடந்தது. பஞ்., தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா முன்னிலை வகித்தார். மாநில தனியார் பொறியியல் கல்லுாரிகள் சங்க செயலாளரும், திருச்சி சிவானி கல்வி குழுமங்களின் நிறுவனருமான டாக்டர் செல்வராஜ், காமராஜர் சிலையை திறந்து வைத்தார்.வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்