மாநில போட்டிக்கு தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பூர் : நம்பியூர் குமுதா கல்வியியல் கல்லுாரியில், ஈரோடு மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டி நடந்தது. பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், குமுதா பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். எப்பி 14 வயது பிரிவினருக்கான போட்டியில் அபிேஷக் இரண்டாமிடம், குழு போட்டியில் பள்ளி அணி இரண்டாமிடம். 17 வயது பிரிவில் தருண்பிரசாத் முதலிடம்; மாணவியர் பிரிவில் அனகா முதலிடம்.சேபர் பிரிவு, 14 வயதினருக்கான போட்டியில், தரணி, 2 வது இடம், 17 வயது பிரிவு பள்ளி மாணவர்களின் குழு அணி இரண்டாமிடம். பாய்ல் பிரிவு, 14 வயதினருக்கான போட்டியில் நித்திஸ்வர் 2வது இடம், இதே வயது பிரிவில் பாரதி கண்ணன் மூன்றாமிடம் பெற்றனர்; 17 வயது பிரிவில் விகாஸ் முதலிடம்.மாவட்ட போட்டியில் அசத்திய மாணவ, மாணவியர் ஓசூரில் நடக்கவுள்ள மாநில வாள்சண்டை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், பள்ளி விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் பெற்றோர் பலர் பாராட்டினர்.