உழவும் மரபும் போட்டி வெற்றியாளர்களுக்கு பதக்கம்
சென்னை : பொங்கல் விழாவின் போது, பொங்கல் - உழவும் மரபும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் சாமிநாதன் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.பொங்கல் பண்டிகையின் போது, செய்தித் துறை சார்பில் கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடைஅணிதல், மண்பானை அலங்கரித்தல், 'செல்பி' உள்ளிட்ட கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.இதற்கு, 6,154 படைப்புகள் வந்த நிலையில், சிறந்த படைப்புகளை அனுப்பிய 36 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, அமைச்சர் சாமிநாதன் நேற்று, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை செயலர் ராஜாராம், இயக்குனர் வைத்தியநாதன், கூடுதல் இயக்குநர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.