பனாரஸ் இந்து பல்கலையில் அகத்தியர் பற்றிய கருத்தரங்கு
சென்னை: காசி தமிழ் சங்கமம் 3.0 -ன் ஒரு பகுதியாக அகத்தியர் பற்றிய தேசிய கருத்தரங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்தது.பல்கலையின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சங்வார் தலைமை வகித்தார். ஆயுர்வேத துறையின் டீன் கோஸ்வாமி, தேசிய சுகாதார அமைப்பில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்த அகத்தியரின் போதனைகளை குறித்து விளக்கினார். சென்னை தேசிய சித்தா நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வெண்ணிலா, காயத்திரி மற்றும் அன்பரசன் ஆகியோர் நவீன மருத்துவத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மருத்துவர் அனுராக் பாண்டேவின் நன்றியுரையாற்றினார்.