மருத்துவ கல்லுாரிகளில் சேர அவகாசம் வழங்க கோரிக்கை
புதுச்சேரி: சென்டாக் மூலம் தேர்வான மாணவர்கள், மருத்துவ கல்லுாரிகளில் சேர நாளை வரை அவகாசம் அளிக்க வேண்டும் என, சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத் தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிய மனு;சென்டாக் நிர்வாகம் கடந்த 18ம் தேதி மருத் துவ படிப்பிற்கான முதல் சுற்று மாணவர் சேர்க்கை பட்டியலை வெளியிட்டு, 23ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்தி மருத்துவ கல்லுாரிகளில் சேரலாம் என, அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ. 4 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.16 லட்சத்து 80 ஆயிரம், என்.ஆர்.ஐ., ஒதுகீட்டிற்கு ரூ. 21 லட்சம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.குறைந்த காலத்தில், பெற்றோர்கள் அரசு அறி வித்த கட்டணத்தை செலுத்த அவகாசம் இல்லாததால், அதிக மாணவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. நாளை 26ம் தேதி வரை மாணவர்கள் பணம் செலுத்தி கல்லுாரிகளில் சேர அவகாசம் கொடுக்க கவர்னர், முத ல்வர் ஆகியோர் உத்தரவிட வேண்டும்.