உள்ளூர் செய்திகள்

அரசு விடுதியில் வசதியில்லை மாணவர்கள் திடீர் போராட்டம்

வடபழனி: வடபழனியில் உள்ள அரசின் சமூகநீதி விடுதியில் நேற்று, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னை கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்காக, வடபழனி திருநகரில் அரசு சார்பில், சமூகநீதி கல்லுாரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.நேற்று இரவு, விடுதிக்கு அருகில் நடந்து வரும் தனியார் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றின் மீது விழுந்தது. இதில், கிணறு மற்றும் மோட்டார் அறைகள் சேதமடைந்தன. இதனால், தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை.இந்நிலையில் 'விடுதியில் உணவு, குடிநீர், கழிப்பறை சரியில்லை. வார்டன் நியமிக்கப்படவில்லை' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள், விடுதி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி போலீசார் மாணவர்களிடம் சமரச பேச்சு நடத்தி, அவர்களை கலைத்தனர்.அதேபோல் ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில், தனியார் கல்லுாரியின் விடுதி செயல்படுகிறது. இங்குள்ள எட்டு விடுதிகளில், 10,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில், விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக, நேற்று மாலை 100க்கும் மேற்பட்டோர், விடுதி அருகே, சாலையில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்று, மீண்டும் விடுதிக்கு உள்ளே சென்று கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்