உள்ளூர் செய்திகள்

தேசிய ஸ்கேட்டிங் போட்டி தேனி மாணவர் முதலிடம்

தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தேனி மாணவர் முதலிடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.'ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப்' இந்தியா சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் போடி ஸ்ரீ ஷகஸ்ரா ரோலர் ஸ்கேட்டிங் அகடாமி சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியை சேர்ந்த மாணவர் ரோகித் அர்ஜுன் 400 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். வரும் ஏப்.,ல் சர்வதேச அளவில் இந்தோனேசியாவில் நடக்கும் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் போடி சிசம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் கிருத்தி கேஷ் 8ம் இடம் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த மாஸ்டர் சர்மிளாவை ஸ்ரீ ஷகஸ்ரா ரோலர் ஸ்கேட்டிங் அகடாமி தலைவர் சதீஷ், பெற்றோர் சங்க தலைவர் சோனமுத்து, துணைத் தலைவர்கள் தனசிங், தங்கராஜ் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்