பள்ளி தேர்வு தேதி மாற்றம் கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நிர்வாக காரணங்களால், வரும் 14ம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் மட்டும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை 17ம் தேதியும், 6 முதல் 9ம் வகுப்பு வரை 18ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு 25ம் தேதி தேர்வு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் 14ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மற்ற தேதிகளில் நடக்க வேண்டிய தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.