உள்ளூர் செய்திகள்

தெய்வானை அம்மாள் கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறையின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில் 'நவீன வணிகம்' தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.வணிகவியல் துறை தலைவர் ஷீபா லட்சுமணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கலைமதி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இணை இயக்குநர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.அவர், நிதியியல் துறையில் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, பின் டெக் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் புத்தாக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கினார்.பேராசிரியர்கள் பாஸ்கரன், மகேஷ்குமார் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். பேராசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்