உள்ளூர் செய்திகள்

எக்ஸல் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு அறிவுத்திறன் தேர்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், 'அறிவுத்திறன் தேர்வு' நடத்தப்பட்டது. இதில், 2026ல் பிளஸ் 2 தேர்வெழுதிய, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 1,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீரங்கசாமி கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.முன்னதாக, ஸ்ரீரங்கசாமி கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவி திட்டத்தின் கீழ், கடந்த ஜன.,ல், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட அறிவுத்திறன் தேர்வில், 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், சிறப்பாக செயல்பட்ட முதல், 130 மாணவர்களுக்கு மற்றும் 120 மாணவர்களுக்கு முறையே கல்வி ஊக்கத்தொகையாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக், தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் பொம்மண்ணராஜா, பொறியியல் கல்லுாரி டீன்கள், முதல்வர்கள், துறை தலைவர்கள், துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்