உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் சி.சி., அணி கிரிக்கெட் லீக்கில் வெற்றி

சென்னை: டிவிஷன் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், திருவள்ளூர் சி.சி., அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில், யுனிவர்செல் சி.சி., அணியை தோற்கடித்தது.திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன.நேற்று முன்தினம் ஆவடியில் நடந்த ஆட்டத்தில், யுனிவர்செல் சி.சி., மற்றும் திருவள்ளூர் சி.சி., அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த யுனிவர்செல் சி.சி., அணி, திருவள்ளூர் அணியின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 25.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்த இலக்கை துரத்திய திருவள்ளூர் சி.சி., அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், நிதானமாக விளையாடி 24.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் ஓ.சி.எப்., அணி 23.1 ஓவர்களில் 72 ரன்களுக்கு சுருண்டது. எதிர்த்து களமிறங்கிய வீல்ஸ் இந்தியா அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் ஒன்பது ஓவர்களிலேயே நான்கு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து வெற்றியை தன்வசப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்