உள்ளூர் செய்திகள்

யுனிவர்சல் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: பல்லடம் தொகுதிக்குட்பட்ட யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் உள் ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு, பல்லடம் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணி மங்கலம் சாலை, என்.ஜி.ஆர்., ரோடு, திருச்சி - கோவை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, துணை வட்டாட்சியர் பெரியசாமி, பல்லடம் டி.எஸ்.பி. பார்த்திபன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், தாளாளர் சாவித்திரி ராஜகோபால், செயலாளர் வினோதரணி ராஜகோபால், முதல்வர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்