பள்ளியில் பட்டமளிப்பு விழா: குஷியான சிறுவர், சிறுமியர்
ஊட்டி: ஊட்டியில் உள்ள கிரசன்ட் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில், சிறுவர், சிறுமியர் குஷி அடைந்தனர்.ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், பள்ளி சிறுவர், சிறுமியர் வகுப்புகளின் அடிப்படையில் பல வண்ண உடைகளுடன் மேடையில் நிறுத்தப்பட்டு, ஊக்கம் அளிக்கும் விதமாக பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பள்ளி தாளாளர் உமர் பரூக் தலைமை வகித்தார். முதல்வர் ஆல்ட்ரிச் பேசுகையில், "பள்ளியில் 'கேஜி' கல்வி என்பது மாணவர்களுக்கான அடித்தளமாகும். அப்போது போதிக்கப்படும் தரமான கல்வி, தன்னம்பிக்கை, ஊக்குவிப்பு விளையாட்டு நிகழ்ச்சிகள் அவர்களின், அடுத்தகட்ட கல்வி பயணத்துக்கு உந்துகோலாக அமையும். குழந்தைகளுக்கான இத்தகைய நிகழ்ச்சிகள், பெற்றோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும்," என்றார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.