உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு முன்னேற்பாடுகள் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'நீட்' தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (இளநிலை) வரும், மே, 3ல், நடக்கிறது. கிருஷ்ணகிரியில் 6 மையங்கள், ஊத்தங்கரையில் 2 மையங்கள், ஓசூரில், 3 மையங்கள் என மொத்தம், 11 தேர்வு மையங்களில் மதியம், 02:00 மணி முதல், மாலை, 05:00 மணி வரை நடக்கிறது.ஓ.எம்.ஆர்., முறையில் நடக்கும் தேர்வு, 4,755 தேர்வர்கள் எழு-துகின்றனர். தேர்வர்களுக்கு தேர்வுக் கூடங்களில் அடிப்படை வச-திகள், தடையில்லா மின்சாரம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு பஸ் வசதிகள் வழங்க சம்மந்தப்பட்ட துறைகள் முலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வகாளின் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது.இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மமதன்குமார், அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்