உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி தரவரிசை பட்டியல் சவீதா பல்கலைக்கு முதலிடம்

சென்னை: 'டைம்ஸ்' உயர்கல்வி ஆசிய பல்கலை தரவரிசை பட்டியலில், இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சவீதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சாதனை படைத்துள்ளது.டைம்ஸ் உயர்கல்வி ஆசிய பல்கலை தரவரிசை பட்டியல், சமீபத்தில் வெளியானது. இதில் மொத்தமாக, 36 நாடுகளைச் சேர்ந்த 929 பல்கலைகள் இடம் பெற்றன.இதில், 90.7 தர மதிப்பெண் பெற்று, சென்னையில் உள்ள சவீதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், 128 இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன.இதை முறியடிக்கும் விதமாக, தேசிய அளவில் சிறந்து விளங்கிய சவீதா பல்கலை, தற்போது உலக அளவிலும் சிறந்து விளங்கும் அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளது.இச்சாதனை குறித்து சவீதா பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் வீரையன் கூறியதாவது:தரமான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக பங்களிப்பில், எங்களது கல்வி நிறுவனம் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.பல துறைகளில் சவால்களை எதிர்கொள்ளும் தகுதியுடன் மாணவர்களை உருவாக்கி, அவர்களை முன்னிலைப்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்