கரூர் ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் சேர்க்கை; விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்: கரூர், ஐ.டி.ஐ.,யில், மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நடக்கிறது. இதில், கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் தொழிற்நுட்ப பயிற்சி, 10 ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் - 1 ஆண்டு (மகளிர் மட்டும்), கணினி தொழிற்நுட்ப பயிற்சி, 10 ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் - 1 ஆண்டு (மகளிர் மட்டும்), மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண்டு படிப்பும், ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பு இரண்டு ஆண்டு படிப்புக்கு இருபாலரும் சேரலாம்.மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், சைக்கிள், வரைபடக் கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணிகள் அரசால் வழங்கப்படும். https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் மூலமாக, இணைய வழியே சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 6க்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர், கூறியுள்ளார்.