பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் சேர விரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 33, மாணவிகளுக்கு 22 உள்ளன. இதே போன்று கல்லுாரி விடுதிகள் மாணவருக்கு 4, மாணவிகளுக்கு 6 உள்ளன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.இந்த துாரம் விதி மாணவியருக்குப் பொருந்தாது. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள், அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பள்ளி விடுதிக்கு ஜூன் 18க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கு ஜூலை 15க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.