மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் தினமலர் பட்டம் இதழ்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு பொது அறிவு, வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களை கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் வழங்கினார்.அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் தினமலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயித்து காட்டுவோம், வழிகாட்டி, நீட் மாதிரி தேர்வு நடத்தி மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர் பதிப்பான பட்டம் இதழ்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் எண்ணற்ற பொது அறிவு, தேர்வுக்கு பயன்படும் பல்வேறு பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தை முன்னிறுத்தி பட்டம் இதழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இதை தினமும் வாசிக்கும் மாணவியர் படிப்பில் பட்டங்களை பெற்று உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.தலைமை ஆசிரியை அருந்தவம் நன்றி கூறினார்.