உள்ளூர் செய்திகள்

பள்ளி விடுதிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை நிறைவு

கோவை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது.காரமடை, எஸ்.எஸ்.குளம், வெள்ளியங்காடு, சீலியூர், சொக்கம்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன.இவ்விடுதிகளில் 510 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் 272 இடங்கள் காலியாக இருந்தன. முதற்கட்ட கலந்தாய்வில் 171 இடங்கள் நிரம்பியுள்ளன.விடுதிகளில் சேர 409 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 101 காலியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்