இன்ஜினியரிங் படிப்பில் சேர மாநில பாடத்திட்டமே சிறந்தது
கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:இந்தாண்டு, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'கட் - ஆப்'பில், 2 மதிப்பெண்கள் குறையும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதில் தவறில்லை.அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் இன்ஜினியரிங் பயில விரும்புவோர், மாநில பாடத்திட்டத்தில் படிப்பதே சிறந்தது. அவர்களின் மதிப்பெண்ணுக்கு தான் அதிக கட் - ஆப் கிடைக்கும்.ஒரே பெயரில் பல கல்லுாரிகள் இருக்கும். எனவே, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முன், விரும்பும் கல்லுாரிகள், அவற்றின் குறியீட்டு எண்கள், தரவரிசை, படிப்புகள் உள்ளிட்டவற்றை தனியே வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை, 'சாய்ஸ் பில்லிங்'கின் போது குறிப்பிட வேண்டும்.இ - வாகனம், ரோபோட்டிக் உள்ளிட்ட பல துறைகளுக்கு, ஒருங்கிணைந்த இன்ஜி., படிப்புடன் புதிய தொழில்நுட்ப அறிவும் தேவை. அதனால், 'பிளக்ஸிபிள் கோர்ஸ்' வசதி உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்வது நல்லது. கல்லுாரிக்கு சென்று விசாரியுங்கள். 'யூ டியூபர்'களின் ஆலோசனைகளை கேட்காதீர்கள்; அவர்களில் பலர் மோசடிக்காரர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.