தமிழ்நாடு நாள் விழா போட்டி பரிசளிப்பு விழா
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நடந்த கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பத்மஜா பரிசு வழங்கினார்.பேச்சுப் போட்டியில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி, அரியலுார் மேல்நிலைப் பள்ளி, பெரியசிறுவத்துார் அரசு பள்ளி, முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.கட்டுரைப் போட்டியில் சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செல்லம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.இவர்களுக்கு முறையே பரிசுத் தொகை 10 ஆயிரம், 7,000, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.