மாணவர்களுக்கு காமராஜ் விருது, உதவித்தொகை வழங்கும் விழா
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 35 மாணவர்களுக்கு, சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலா ரூ. ஆயிரம் வழங்கினார்.அமைச்சர் நிர்மல் குமார் காமராஜர் விருது வழங்கினார். கவுன்சிலர் இந்திரா காந்தி, திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன், கே.பி. அனைத்து விளையாட்டு குழு நிர்வாகி பாஸ்கர் பாண்டி, எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற இளைஞர் அணி அரவிந்தன் கலந்து கொண்டனர்.