உள்ளூர் செய்திகள்

ரத்தினம் நிகர்நிலை பல்கலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக., 22, காலை 8 மணிக்கு ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் நிகர்நிலை பல்கலையில் நடக்கிறது.கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. உற்பத்தி, ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல், விற்பனை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன.8ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை படித்தவர்கள், தொழிற்கல்வி முடித்தவர்கள், நர்ஸ்கள், இன்ஜினியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் வயது வரம்பின்றி இலவசமாக பங்கேற்கலாம்.சுயவிவரம், கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.தேர்வு செய்யப்படுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்